இந்த விஷயத்தை நான் மட்டுமில்லை யாராலும் எதவும் பண்ண முடியாது ; விராட்கோலி பேட்டி

0

இன்று தொடங்கியுள்ளது தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ளது இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளது.

அதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு முக்கியமான போட்டியாகும். இதுவரை இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை கூட டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றியதே இல்லை. இந்த முறையாவது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ?

இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி போட்டி முன் அளித்த பேட்டியில் ; போட்டியில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த மைதானத்தில் அதிக ரன்களை அடித்தால் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்திய அணியில் நான் இப்பொழுது பிட் ஆக உள்ளேன். அதனால் எனக்கு பதிலாக விஹாரி வெளியேறியுள்ளார். சிராஜ்க்கு பலமாக அடிபட்டுவிட்டது, அதனால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் உமேஷ் யாதவ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து கொண்டு வருகிறார்.

அதிலும் சிராஜ்-க்கு பதிலாக இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் ஆ ? என்று தேர்வு செய்வதில் பல குழப்பம் எழுந்தது. எங்கள் (இந்திய)அணியின் ஒரே நோக்கம் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார் விராட்கோலி.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியின் விவரம் :

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சேடீஸ்வர் புஜாரா, விராட்கோலி, ரஹானே, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்டுல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா ? இந்திய கிரிக்கெட் அணி ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here