கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார் ; 4மணி நேரம் தீவிரமான விசாரணை ; நடந்து என்ன ??

சண்டிகர் ; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் சண்டிகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் லைவ் – வில் யுவராஜ் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நேரலையில் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பொழுது இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலின் சாதியை பற்றி கூறியுள்ளார். யுஸ்வேந்திர சஹால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதனை பற்றி தேவை இல்லாமல் யுவராஜ் சிங் பேசினார். அதனால் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு நபர் யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார்.

அதனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஹரியானாவில் யுவராஜ் சிங்-ஐ கைது செய்தது போலீஸ். பின்பு யுவராஜிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்பு யுவராஜ்-க்கு ஜாமீன் கொடுத்துள்ளது நீதிமன்றம். இதனை அறிந்த வழக்கு தொடர்ந்த நபர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார். இந்த செய்தி யுவராஜ் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்படுத்தியுள்ளது.

இருத்தலும், யுவராஜ் சிங் அப்படி பேசியபோது, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த யுவராஜ் சிங் ; நான் ஒரு வேண்டுமென்று யாருடைய உணர்வுகளை காயப்படுத்தவே மாட்டேன். அதனை நான் தெரியாமல் தான் சொன்னேன். அதற்கு என்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

இதுவரை இந்திய அணிக்காக பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் யுவராஜ் சின். அதுமட்டுமின்றி ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த பெருமை அவரையே சேரும்.

கிரிக்கெட் ரசிகர்கள் நீங்க சொல்லுங்க… !! யுவராஜ் சிங் பேசியது சரியா தவறா ??? என்று COMMENTS பண்ணுங்க….!!