இவர் எப்படி கேப்டன் ஆனார் ?? பாவம் பா… அதிக சோதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறார்..!! யார் தெரியுமா…!!!

14வது ஐபிஎல் போட்டி தொடங்கி சில தினங்களேஆகியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில்இருகின்றனர். 15வது போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்களை விளாசியுள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்கள், டுப்ளஸிஸ் 95 ரன்கள், மொயின் அலி 25 ரன்கள் மற்றும் தோனி 17 ரன்கள் அடித்துள்ளனர்.

பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிவரை போராடிய 202 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இப்பொழுது புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 6வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.

இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. இத்தனைக்கும் இரு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா. ஆனால் இந்த ஆண்டு மிகவும் மோசமாக போட்டிகளை விளையாடி வருகிறது.

இதற்கு காரணம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான கேப்டன் அமையவில்லை என்பது தான் முக்கிய காரணம் என்று சமூகவலைத்தளங்களில் கொல்கத்தா ரசிகர்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய கேப்டன் ஈயின் மோர்கன் சன்ரைசர்ஸ் எதிரான போட்டியில் 2 ரன்கள், மும்பைக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள், மற்றும் சென்னைக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொடுத்த நேரத்தை விட அதிகம் நேரத்தை எடுத்து கொண்டதால் 12 லட்சம் ரூபாய் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அபராதம் விதித்துள்ளது.