உலகக்கோப்பை போட்டியில் இந்த இரு வீரர்களின் பவுலிங் மோசமாக உள்ளது ; பார்திவ் பட்டேல் பேட்டி ; யார் அந்த இரு பவுலர்கள் ?

ICC T20 உலகக்கோப்பை : கடந்த 17ஆம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. அதுவும் இந்த முறை இந்தியாவில் நடைபெற வேண்டிய உலகக்கோப்பை போட்டி கொரோனா காரணமாக பாதுகாப்பு நலன் கருதி இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதில் இளம் வீரர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், சூரியகுமார் யாதவ், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, ஷர்டுல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 188 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதில் 19 ஓவர் முடிவில் வெறும் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 192 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல்;

அதில் ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்யாதது தான் சில சிக்கலாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, ஷர்டுல் தாகூர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். சுழல் பந்து வீச்சாளர் ராகுல் சஹார் பந்து வீசி 1 விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் 43 ரன்களை கொடுத்துள்ளார்.

அதே சமையத்தில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பவுலிங் தான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் பயிற்சி ஆட்டத்தின் போது 4 ஓவர் பந்து வீசி 54 ரன்களை கொடுத்து எந்த விக்கெட்டையும் கைப்பற்றவே இல்லை.

இந்த நிலைமை நிச்சியமாக இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல். என்ன செய்ய போகிறார் விராட்கோலி ? ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக ஷர்டுல் தாகூர் இடம் பெறுவாரா ?? என்று பல கேள்விகள் எழுகின்றன.

இந்திய அணிக்கு முதல் போட்டி வருகின்ற அக்டோபர் 24ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது. அதில் வெற்றி பெறுமா ?? இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். கிரிக்கெட் ரசிகர்கள் நீங்க சொல்லுங்க ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக ஷர்டுல் தாகூர் இடம்பெறலாமா ?? என்று COmments பண்ணுங்க…!