ஆஸி., டாஸ் விண்!!! இரு அணியிலும் முக்கிய மாற்றங்கள்..!! யார் உள்ளே?? யார் வெளியே??

டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. குரூப்-1ல் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியும், குரூப்-2ல் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ளவிருக்கின்றன. பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக காணப்படுகிறது. அதேநேரம் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றாலும், மீதமுள்ள நான்கு போட்டிகளில் வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. குறிப்பாக வங்கதேச அணியை 73 ரன்களுக்குள் சுருட்டி, அதனை 7 ஓவர்களுக்குள் சேஸ் செய்து நல்ல ரன் ரேட் அடிப்படையில் முன்னேறியிருக்கிறது. 

பந்துவீச்சை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியில் சஹீன் அப்ரிடி எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதேபோல், ஹசன் ரவூப், இமாத் வசீம் இருவரும் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெடுகளை எடுப்பதால், எதிரணியை எளிதாக வீழ்த்த முடிகிறது. பேட்டிங்கில் துவக்க வீரர்கள் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்து தருகின்றனர். மிடில் ஆர்டரில் அனுபவமிக்க ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக் இருவரும் அதிரடியாக ரன்களை எடுத்து தருவதால் பாகிஸ்தான் அணியால் நல்ல ஸ்கோரை எட்ட முடிகிறது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்டார்க் மற்றும் ஹேசல்உட் இருவரும் பவர்-பிளே ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். ஜாம்பா மிடில் ஓவர்களில் ரன் விடாமல் ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதால் எதிரணியை எளிதாக திணறடிக்க முடிகிறது. துவக்க வீரர் வார்னர் மீண்டும் பார்முக்கு வந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணி பலம் மிக்கதாக காணப்படுகிறது. ஆஸி., அணிக்கு மிடில் ஓவர்களில் திணருகிறது. இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. துபாய் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக உள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே காணப்படும் என்பதால் இரண்டாவதாக பந்துவீசும் அணி சற்று கவனத்துடன் ஆடும்பட்சத்தில் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இன்றைய போட்டியில் ஆடும் சில அணிகளின் வீரர்கள் பட்டியல்

பாகிஸ்தான் அணி

முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி.

ஆஸ்திரேலிய அணி

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.