Dream 11; இந்த 11 பேர் கொண்ட அணி சிறப்பாக விளையாடுவார்களா ?? உத்தேச Dream 11 அணியின் விவரம் இதோ ;

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணியும் இன்று இரவு, 7மணியளவில் ராஞ்சி மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்தியா அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி இறுதி ஓவர் வரை சென்று தான் வெற்றியை கைப்பற்றியது. அதனால் இன்றைய போட்டியும் நிச்சியமாக இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்கும். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!

கிரிக்கெட் போட்டி என்று வந்தாலே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரீம் 11 தான் நியபகத்திற்கு வரும். அதிலும் சரியாக 11 வீரர்களை தேர்வு செய்தால் நிச்சியமாக பல பரிசுகளை வெல்ல முடியும்….! அதற்க்கான உத்தேச அணியை இப்பொழுது பார்க்கலாம்…!!

முதல் ட்ரீம் 11 உத்தேச அணி விவரம் ;

ரோஹித் சர்மா (கேப்டன்) : இவர் முதல் போட்டியில் 48 ரன்களை விளாசியுள்ளார்.

மார்ட்டின் குப்டில் (துணை கேப்டன்) : முதல் போட்டியில் இந்திய அணியை அதிர வைத்த பேட்ஸ்மேன் தான் இவர், அதில் அதிரடியாக விளையாடி 70 ரன்களை அடித்தார்.

கே.எல்.ராகுல் : கடந்த போட்டியில் சரியாக விளையாடவில்லை. இருந்தாலும் அதிரடியான வீரர் என்பதால் அதிக ரன்களை கைப்பற்ற முடியும் என்பது தான் உண்மை.

சூர்யகுமார் யாதவ் : நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக 62 ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார்.

மார்க் சாப்மேன் ; நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரரான இவர் முதல் டி20 போட்டியில் 63 ரன்களை அடித்துள்ளார்.

மிச்சேல் சண்ட்னர் ; நியூஸிலாந்து அணியை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் தான் இவர், கடைசியாக விளையாடிய போட்டியில் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளர்.

ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்) ; இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கும் விக்கெட் கீப்பர், பல கேட்ச் மற்றும் பேட்டிங் செய்து பல ரன்களையும் அடிக்க கூடிய வீரர் தான் இவர்….!!

பவுலர்கள் ; ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், ட்ரென்ட் போல்ட், மிச்சேல்

போன்ற வீரர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது….!!! இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா ???