மும்பை இந்தியன்ஸ் அணி தவறவிட்ட நான்கு முக்கியமான வீரர் ; இவர்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லையோ ; தப்பு பண்ணிட்டீங்களே ;

ஐபிஎல் போட்டி என்றால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படும் என்பது தான் உண்மை. கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆகியது, பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, நடந்த முடிந்த ஐபிஎல் 2021யில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் ஐபிஎல் போட்டியில் இணைந்துள்ளது.

அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளதால் அணைத்து அணிகளிலும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தவிர்த்து மீதமுள்ள வீரர்களை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும், பின்னர் சரியான வீரர்களை ஏலத்தின் போது எடுத்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் அந்த தக்கவைக்கப்படும் நான்கு வீரர்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தது. ஏனென்றால் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால் மற்ற அணிகளை காட்டிலும் மும்பை அணிக்கு ரசிகர்கள் இடையே எப்பொழுதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முன்தினம் வெளியான தகவலின் படி மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர்கள் நான்கு வீரர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்ட் போன்ற வீரர்கள் தான் மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளன. இதனை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் முக்கியமான வீரர்களான ஹார்டிக் பாண்டிய, இஷான் கிஷான், டிரென்ட் போல்ட் மற்றும் டி-காக் போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான போல்ட் ஆவது இடம்பெற்றிருக்கலாம். அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2021யின் இறுதி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின.

அதில் இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெறும் 32 பந்தில் 84 ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2021 போட்டிகளில் 10 போட்டிகளில் விளையாடிய 241 ரன்களை அடித்துள்ளார். அதேபோல, சூர்யகுமார் யாதவ் 14 போட்டிகளில் விளையாடி 317 ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஆல் -ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் முக்கியமான நேரங்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியுள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சில போட்டிகளை வைத்து அவரை அணியில் துவைத்து கொள்ளாதது மும்பை ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2022 ஏலத்தின் போது முக்கியமான வீரர்களை தக்கவைத்து கொள்ள மபோகிறார்களா ?? இல்லையா ?? மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்த வீரர்கள் சரிதானா ? இல்லை வேறு எந்த வீரர் தக்கவைக்கப்ட்டு இருக்க வேண்டும் ? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!