நான் இந்திய அணியில் இடம்பெற்றதற்கு இதுதான் ஒரே காரணம் ; நெகிழ்ச்சியாக பேட்டியளித்த வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் 2022 போட்டியின் பேச்சு தினம்தோறும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் இந்த முறை புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் அறிமுகம் ஆக உள்ளது. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்த போவதாகவும் பிசிசிஐ. ஏனென்றால் அப்படி நடந்தால் மட்டுமே அனைத்து அணிகளும் சரி சமமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கும்.

இரு மாதங்களுக்கு முன்பு தான் ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடிந்தது. முதல் பாதி விளையாடு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது பின்னர் சில வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. அதனால் உடனடியாக போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்து மீண்டும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கினார்கள்.

அதில் முதல் 7 போட்டிகளில் வெறும் இரு போட்டிகளில் மட்டுமே வெற்றியை கைப்பற்றிய நிலையில் இருந்தது கொல்கத்தா அணி. பின்னர் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

பின்னர் கொல்கத்தா அணிக்கு அசைக்க முடியாத ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி முக்கியமான காரணம் என்று கூட சொல்லலாம். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலம் நடைபெற போகிறது. அதனால் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ.

அதில் கொல்கத்தா அணி, வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவத்தி, சுனில் நரேன், மற்றும் ரசல் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது கொல்கத்தா அணி. அதுமட்டுமின்றி அவரது அதிரடியான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார்.

இதனை பற்றி பேசிய வெங்கடேஷ் ஐயர், நான் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, கொல்கத்தா அணி, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளது, ஏனென்றால் கிரிக்கெட் உலகத்தில் என்னை அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, நான் இந்திய அணியில் இடம்பெற்றதற்கும் கொல்கத்தா அணி தான் முக்கியமான காரணம்.

ஏனென்றால் , அறிமுகம் ஆன 7 போட்டிகளில் இந்திய அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளேன். அதுவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த முறை 4 கோடி ரூபாய்க்கு வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்….!!