இது எப்படி சாத்தியம்?? விராட் கோலி இதை ஏன் மறைத்தார்??; கோலி மீது கடுப்பான விவிஎஸ் லக்ஷ்மன்.

வீரர்கள் காயம் அடைந்ததை விராட் கோலி ஏன் மறைத்தார் என்று கடுமையாக சாடியிருக்கிறார் இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியான மழை பொழிவு காரணமாக, மைதானத்தில் ஈரம் அதிகமாக இருந்ததால் காலையில் ஆட்டம் தாமதமானது. 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 12 மணிக்கு இந்திய அணி பேட்டிங் செய்ய துவங்கியது. 

முதல் போட்டியில் விளையாடிய ரஹானே, ஜடேஜா மற்றும் இசாந்த் சர்மா மூவரும் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் மற்றும் சிராஜ் இருவரும் உள்ளே எடுத்துவரப்பட்டுள்ளனர். இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் இணைந்த விராட்கோலி கேப்டன் பொறுப்பை தொடர்கிறார்.

மழை காரணமாக நேற்றைய தினம் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவில்லை. அப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் விராட் கோலி. “இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யார் இடம் பெறுவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விருதிமான் சஹா கழுத்தில் ஏற்பட்ட காயம் குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். பிட்சில் மாற்றம் இருப்பதால் பந்துவீச்சில் மாற்றங்கள் செய்வது குறித்து பேசி வருகிறோம்.” என பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். 

ஆனால், பேட்டியின்போது வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர் என எந்தவித தகவல்களும் அவர் கொடுக்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளான ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன், எதற்காக விராட் கோலி இதை மறைக்கிறார்?? என கடுமையாக சாடியுள்ளார். 

“நேற்று விராட் கோலி பேட்டி அளிக்கும் போது, வீரர்கள் காயத்தில் இருப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எதற்காக அவர் மறைத்தார்?. ஜடேஜா போன்ற வீரர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார். அப்போது அக்சர் பட்டேல் உள்ள எடுத்துவரப்பட்டு சிறப்பாக விளையாடியதால் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வருகிறார்.

ரகானே, இஷாந்த் ஷர்மா இருவரும் முக்கியமான வீரர்கள் அவர்களுக்கு காயம் இருப்பது குறித்து விராட் கோலி ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை?. அவர்களின் காயம் எந்த அளவிற்கு இருக்கிறது? தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக குணம் அடைந்து விடுவார்களா? என எதைப் பற்றியும் அவர் கூறாமல் இருப்பது ஏன்??. 

காயம் காரணமாக சில வீரர்கள் வெளியே இருப்பதால் இரண்டாவது போட்டியில் வீரர்களை தேர்வு செய்வதில் விராட்கோலி சிக்கல் இருக்காது. ஆனாலும் அணியில் நடப்பவற்றை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக உள்ளே வந்து சிறப்பாக விளையாடி, அடுத்த போட்டியில் தனது இடத்தை தக்க வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றும் பகிர்ந்து கொண்டார்.