டெஸ்ட் போட்டிகள் :
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆரம்பித்த போட்டி இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகின்றனர்..!
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருந்தாலும் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய இந்திய அணி இறுதியில் 416 ரன்களை அடித்தனர்.
அதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 104 மற்றும் ரிஷாப் பண்ட் 146 ரன்களை அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் பரிஸ்டோவ் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு ஆறுதலாக இருந்தது.
இறுதி வரை போராடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்-ல் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 284 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 138 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகின்றனர்.
ஆமாம், இதுவரை 45 ஓவர் முடிந்த நிலையில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 125 ரன்களை அடித்துள்ளனர். அதில் புஜாரா 50, ரிஷாப் பண்ட் 30, விராட்கோலி 20 ரன்களை அடித்துள்ளனர். இதில் விராட்கோலி விக்கெட் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது…..!
வீடியோ:
An absolute jaffa!! 😍
Rooty’s reactions 😅
Scorecard/Clips: https://t.co/jKoipF4U01
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/IzNH1r5V1g
— England Cricket (@englandcricket) July 3, 2022
29வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார் விராட்கோலி. அப்பொழுது பந்து பேட்-டில் பட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. ஆனால் அதனை விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்ஸ், அதனை தவறவிட்டார், இருப்பினும் அதனை துல்லியமாக ஜோ ரூட் கேட்ச் பிடித்து விராட்கோலி விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
விராட்கோலி முதல் இன்னிங்ஸ்-ல் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸ்-ல் 200 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இதே நிலைமை தொடரினால் அவரது கிரிக்கெட் வாய்ப்புகள் மோசமான நிலைக்கு கூட தள்ளப்படலாம் என்பது மாற்றுக்கருத்தில்லை. என்ன செய்ய போகிறார் விராட்கோலி ?