பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுமன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை சிறப்பாக விளையாடவில்லை.
ஹனுமா விஹாரி, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்டுல் தாகூர் ஆகிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்த வந்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான ரன்கள் இல்லாத நிலை தான் ஏற்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை குவித்தனர்.
ஆமாம், ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா செய்த சிறப்பான பார்ட்னெர்ஷிப் தான் இந்திய ரன்களை அடிக்க காரணமாக இருந்தது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 338 ரன்களை அடித்துள்ளது. அதில் சுமன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட்கோலி 11 ரன்களை அடித்துள்ளார்.
மேலும் அதிரடியாக விளையாடிய ரிஷாப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 83 ரன்களை அடித்துள்ளனர். பின்பு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 284 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டை-யும் இழந்தனர். அதனால் 138 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது. இதுவரை 25 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 125 ரன்களை அடித்துள்ளனர். ஒரு வீரர் ரன்கள் அடித்தாலோ, அல்லது ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தாலும் ,அவர்களை பற்றி கருத்து சொல்வது வழக்கம் தான்.
அதேபோல ரிஷாப் பண்ட் அடித்த சதம் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ” எனக்கு தெரிந்து இங்கிலாந்து பவுலர் சரியாக பவுலிங் செய்யவில்லை, அதனால் பண்ட் விளையாடியது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவரிடம் (ரிஷாப் பண்ட்) சில பிரச்சனை உள்ளது.”
“அவரது இடது கை சரியாக விளையாடவில்லை, இருந்தாலும் அவர் சதம் அடிக்கிறார் என்றால் இங்கிலாந்து பவுலர்களிடம் பிரச்சனை உள்ளது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ரிஷாப் பண்ட் -க்கு வீக் ஆன இடத்தில் பவுலிங் செய்யவில்லை என்பது தான் உண்மை.”
“நான் குறிப்பிட்டு இவர்கள் தான் இங்கிலாந்து அணியில் சரியாக விளையாடவில்லை என்று சொல்ல முடியாது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் சுழல் பந்து வீச்சாளர்களை வீச வைத்தது எந்த அளவிற்கு அது சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை .”
“நான் ரிஷாப் பண்ட் -க்கு எதிராக பேசவில்லை. ஆனால் எதிர் அணியின் சின்ன தவறால் நிச்சியமாக அதிக ரன்களை அடிக்க கூடம் என்பது தான் உண்மை.” என்று கூறியுள்ளார் பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் முகமத் ஆசிப்.