பாகிஸ்தான் அணியில் இவர் இல்லை ; அதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனை இல்லை ; சர்ச்சையை கிளப்பிய பாக். கேப்டன் ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் முக்கியமான அணிகளின் விவரம் ;

ஆசிய கோப்பைக்கான போட்டியில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் இதுவரை உறுதியாகியுள்ளது. பின்பு இறுதி இடத்திற்கு மொத்தம் நான்கு அணிகள் (ஹாங் காங், ஐக்கிய அரபு, குவைத் மற்றும் சிங்கப்பூர்) தகுதி சுற்றில் விளையாடி கொண்டு வருகின்றனர். அதனால் 6வதாக எந்த அணி இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து கொண்டு வருகிறது.

இந்திய அணியின் அறிவிப்பு:

கடந்த 8ஆம் தேதி அன்று ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் மோதல்:

வருகின்ற 28ஆம் தேதி அன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. மற்ற அணிகளுக்கு நடைக்கும் போட்டியை விட எப்பொழுதும் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு நடக்கும் மோதல் மிகப்பெரிய ஒன்று.

இறுதியாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது உலகக்கோப்பை டி-20 லீக் 2021 போட்டியில் தான். அதில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை கைப்பற்றியுள்ளனர். அதில் இந்திய அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 151ரன்களை அடித்தனர். ஆனால் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 152 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றினார்கள்.

பாக்கிஸ்தான் முன்னாள் கேப்டனின் சர்ச்சை பேச்சு:

கடந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 லீக் போட்டியின் போது இந்திய அணி தோல்வியை காப்பாற்றியது.அதில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி போன்ற மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனின் விக்கெட்டை கைப்பற்றியது பாகிஸ்தான் வீரரான ஷாஹீன் அப்ரிடி தான்.

ஆனால் வருகின்ற ஆசிய கோப்பைக்கான போட்டியில் ஷாஹீன் அப்ரிடி-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் ஆசிய கோப்பையில் விளையாட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வகிர் யூனிஸ் கூறுகையில் ; ” பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியில் இல்லாதது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.”

கடந்த ஆண்டு உலகட்ப்பை 2021 போட்டிக்கு பிறகு இந்திய அணி அனைத்து அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இவரது கருத்து மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.