ரோஹித், விராட்கோலி இல்லை; இதுவரை இவரை போல தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதே இல்லை ; கவுதம் கம்பிர் ஓபன் டாக் ;

ஆஸ்திரேலியா : இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி, இன்னும் 10 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது அரையிறுதி சுற்றுக்கு.

அதனால் இனிவரும் போட்டிகள் நிச்சியமாக சுவாரஷியமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று காலை 9:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், தாசன் ஷனாக தலைமையிலான இலங்கை அணிய மோதியுள்ளன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

இந்திய அணியின் அதிரடி மன்னன் :

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார் சூரியகுமார் யாதவ். சரியாக 4வது இடத்தில் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு முக்கியமான நேரத்தில் ரன்களை அடித்து கொடுத்து பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ்கிறார் சூர்யகுமார் யாதவ்.

அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார் சூர்யகுமார் யாதவ். அதுவும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களையும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51* ரன்களையும், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 68 ரன்களை அடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

அதனால் இந்திய அணியில் மிடில் ஆர்டர் எப்பொழுதும் வலுவாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சூர்யகுமார் யாதவை பற்றி பல முன்னாள் வீரர்கள் புகழ் பேசிக்கொண்டு அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் தான் டி-20 போட்டிகளில் சிறந்த ஆட்டம் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.”

இனிவரும் போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் முக்கியமான ஒன்றாக இருக்குமா ? இல்லையா ? இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் இல்லையென்றால் வலுவாக இருக்குமா ? இல்லையா ? சூர்யகுமார் யாதவிற்கு மாற்று வீரர் யாராக இருக்க முடியும் ???