சச்சின், தோனி கூட செய்யாத ஒன்றை, முன்னாள் வீரரான சிக்சர் கிங் யுவராஜ் சிங் செய்துள்ளார் !! அப்படி என்ன செய்தார் யுவராஜ் ?

கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் யுவ்ராஜ் சிங். அதுவும் ஒருநாள் போட்டியில் கென்யா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். பின்னர் 2017ஆம் ஆண்டு அவரது ஓய்வை அறிவித்தார் சிக்சர் மன்னன் யுவ்ராஜ் சிங்.

இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளை விளையாடி 1900 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி, 304 ஒருநாள் போட்டியில் விளையாடி 8701 ரன்களையும், 58 சர்வதேச டி-20 போட்டியில் விளையாடி 1177 ரன்களையும் விளாசியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

சச்சின், தோனி கூட செய்யாத ஒன்றை, முன்னாள் வீரரான சிக்சர் கிங் யுவராஜ் சிங் செய்துள்ளார் !! அப்படி என்ன செய்தார் யுவராஜ் ?

யுவ்ராஜ் சிங் மட்டும் தான் அண்டர் 15, 19 இந்திய அணியில் விளையாடி (டி-20 மாற்றும் ஒருநாள் ) போட்டியில் விளையாடி உலகக்கோப்பையும் கைப்பற்றியுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு மேன் ஆஃப் சீரியஸ் படத்தையும் வென்றுள்ளார். இதுவரை இதனை யாரும் செய்யவில்லை என்பதே உண்மை.

யாராக இருந்தாலும் உடல்நலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 2011ஆம் ஆண்டு யுவ்ராஜ் சிங்-க்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தார் மருத்துவர். அதனால் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி உரிய சிகிச்சை அளித்து பின்னர் 2012 ஆம் உடல்நலம் சரியான பின்னர் இந்திய வந்தடைந்தார்.

ஆனால் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா?? இல்லையா ?? என்ற பல கேள்விகள் அந்த சமையத்தில் எழுந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கினார் யுவ்ராஜ் சிங்.

பின்னர் இப்பொழுது அனைத்து விதமாக டி-20, ஒருநாள் , ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தி உள்ளார் யுவ்ராஜ் சிங். ஆனால் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் Road Safety World Series போட்டியில் இந்திய லெஜெண்ட் அணியில் விளையாடினார் யுவ்ராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.