இவரை பார்த்து கேப்டன் விராட்கோலி கற்றுக்கொள்ள வேண்டும் ; பாகிஸ்தான் வீரர் ராமிஸ்ராஜா அதிரடி பேட்டி..!

England vs India 2021 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடங்கியுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்து 65.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 183 ரன்களை அடித்தனர். பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸ் 84.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 278 ரன்களை விளாசினார். அதனால் 95 ரன்கள் லீட் ஆகா இருந்தது இந்திய.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 85.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 303 ரன்களை அடித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்ல் பேட்டிங் செய்த இந்திய அணியால் 14 ஓவரில் 1 விக்கட்டை இழந்து 52 ரன்களை விளாசினார். ஆனால் போட்டி ட்ராவாக முடிந்துவிட்டது.

இந்த முதல் டெஸ்ட் போட்டியை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா, விராட்கோலியின் பேட்டிங்கை பார்த்து விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, விராட்கோலி இந்த வீரரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

யார் அந்த வீரர் ?? யாரை பார்த்து விராட்கோலி கற்றுக்கொள்ள வேண்டும் ?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். இதனை பற்றி பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ராமிஸ்ராஜா ;

சில நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, இளம் வீரர்களை பார்த்து சில விசியங்களை கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக கே.எல்.ராகுல் விளையாடி விதம் அருமையாக இருந்தது.

அதனை விராட்கோலி பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறியுள்ளார் ராமிஸ்ராஜா. ஏனென்றால் அதேபோட்டியில், கே.எல்.ராகுல் 84 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.