எங்களுக்கு புள்ளிப்பட்டியளில் இடம் பிடிப்பதை விட இதுதான் முக்கியம் ; எம்.எஸ்.தோனி பேட்டி ; முழு விவரம் இதோ ;

ஐபியின்2021ல் 44வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் விளையாடி வருகின்றனர். இதுவரை 15 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சிஎஸ்கே அணி 11 போட்டியிலும், 4 போட்டியில் சன்ரைஸ்சர்ஸ் அணியும் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் தொடர்ந்து எய்க்கெட்டை இழந்து வருகிறது. ஆனால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான சஹா அதிகபட்சமாக 44 ரன்களை விளாசினார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 2, சஹா 44 , கேன் வில்லியம்சன் 11, பிரியம் கர்க் 7, அபிஷேக் சர்மா 18, அப்துல் சமத் 18, ஜேசன் ஹோல்டர் 5, ரஷீத் கான் 16 ரன்களை அடித்துள்ளானர். பின்னர் சிஎஸ்கே அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் விளையாட உள்ளது. எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

போட்டிக்கு முன்பு பேசிய தோனி ; இந்த போட்டியில் போக போக ரன்களை அடிக்க சிரமம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அருமையாக நேரத்தை புரிந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நாங்கள் பயிற்சியின் போது எப்படி விளையாடுகிறோமோ அதேதான் போட்டியின் போதும் செய்கிறோம்.

சிஎஸ்கே அணியின் வீரர்கள் பலர் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பயிற்சி அவ்வளவு ஒன்றும் தேவைப்படாது. ஆனால் ஒருசிலர் சரவதேச போட்டிகளில் விளையாடமல் இருக்கும் வீரர்களுக்கு தான், சில பயிற்சிகள் அவசியமாகும். நான் புள்ளிப்பட்டியளில் முதல் இரு இடங்களை பிடிக்க விளையாடவில்லை, அது முக்கியமில்லை. நாங்கள் என்ன பிளான் செய்கிறோம், அதனை போட்டிகளில் சரியாக செய்கிறோம் ஆ ?? இல்லையா என்பதை தான் நாங்கள் பார்த்து வருகிறோம் என்று கூறியுள்ளார் தோனி.