சின்ன ஒரு தவறு செய்த ரோஹித் சர்மா அதனை சுட்டிக்காட்டிய ஆகாஷ் சோப்ரா ; அப்படி என்ன செய்தார் ரோஹித் ?? முழு விவரம் இதோ ;

நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார் ரோஹித் சர்மா.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் அட்டகாசமான அமைந்தது. அதுமட்டுமின்றி, இறுதி ஓவர் வரை சிறப்பாக விளையாடியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

அதில் மார்ட்டின் குப்டில் 70, மிச்சேல் 0, சாப்மேன் 63, க்ளென் பிலிப்ஸ் 0, சேபிரட் 12, ராச்சின் ரவீந்திர 7, சண்ட்னர் 4 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பின்னர் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி மாஸ் காட்டியுள்ளனர்….!!!

ஆனால் இறுதி ஓவர் வரை சென்ற இந்திய அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி, அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று டி20 போட்டிக்கான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ???

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ; ரோஹித் சர்மா ஒரு சின்ன தவறு செய்துள்ளார். அதில் ‘ இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் தேவை பாடுகிறது. அதனால் தான் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்றார்.

ஆனால் அவரை பவுலிங் செய்யவில்லை. எனக்கு தெரிஞ்சு ரோஹித் சர்மா இது போன்ற சின்ன சின்ன தவறுகளை செய்து கொண்டு வருகிறார். ஆனால் ரோஹித் சர்மா ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி நல்ல கேப்டன் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா… !!!