சதம் அடித்த ஜடேஜாவிடம் CSK அணியை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது ; அதற்கு ஜடேஜா சொன்ன பதில் இதுதான் ;

0

டெஸ்ட் போட்டி :

பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 1 போட்டியிலும் வென்றுள்ளனர்.

மீதமுள்ள ஒரு போட்டி ட்ரா ஆனது. ஒருவேளை இந்த ஐந்தாவது போட்டியில் ட்ரா ஆனால் இந்திய அணி தான் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முதல் இன்னிங்ஸ்:

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் மற்றும் பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தது… !

ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது. அதில் ரவீந்திர ஜடேஜா 104 மற்றும் ரிஷாப் பண்ட் 146 ரன்களை அடித்துள்ளனர். ஏனென்றால் முதல் ஐந்து விக்கெட்டை இழந்த நிலையில் வெறும் 98 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய.

ஆனால் 84.5 ஓவர் வரை சிறப்பாக விளையாடி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 416 ரன்களை அடித்தனர். இப்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது.

ரவீந்திர ஜடேஜா பேட்டி:

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. அதுமட்டுமின்றி, இந்த சதம் ஜடேஜாவிற்கு மூன்றாவது சதம். முதல் இன்னிங்ஸ் நிறைவு பெற்ற பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பல கேள்விகள் கேட்கப்பட்டது.அதிலும் குறிப்பாக சென்னை அணியை பற்றி சில கேள்விகள் எழுந்தன.

அதில் “CSK அணி-யில் விளையாடிய பிறகு, ஜடேஜா இன்னும் வலிமையாக திரும்புவதில் உறுதியாக உள்ளாரா என்று கேட்கப்பட்டது? அதற்கு பதிலளித்த ஆல்ரவுண்டர் ஜடேஜா, “நிச்சயமாக இல்லை” என்று பதிலளித்தார். மேலும் பேசிய ஜடேஜா ; “எனக்கு இப்பொழுது ஐபிஎல் போட்டிகள் எதுவும் என்னுடைய யோசனையில் இல்லை.”

“இந்திய அணிக்காக எந்த போட்டியில் விளையாடினாலும், அதில் தான் முழு கவனம் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய அணியை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். இந்திய அணியில் சிறப்பாக விளையாடி பெருமைப்படுவதை விட மற்ற போட்டிகளில் சந்தோஷம் கிடைக்காது என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here