ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணி எது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தான் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான சொத்தாக கருதப்பட்டனர்.
ஆனால் இப்பொழுது சுரேஷ் ரெய்னாவை பற்றி யோசிக்க கூட ஆட்களே இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் 2020யில் ஒரு சில காரணங்களுக்காக அவரால் அந்த சீசன் முழுவதும் விளையாட முடியாமல் போனது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக தான் இருந்துள்ளது.
அதனால் சுரேஷ் ரெய்னாவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இருக்கும் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள சிஎஸ்கே அணி முடிவு எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா முன்பு போல பேட்டிங் செய்யாத காரணத்தால் சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக தான் இருந்தது.
பின்னர் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் ராபின் உத்தப்பா இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா இடத்தை இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றியுள்ளார் என்பது தான் உண்மை. ஏனென்றால் கடந்த ஐபிஎல் 2020யில் சிஎஸ்கே அணியில் அற்புதமான ஆட்டத்தை விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆன இரண்டாவது ஆண்டில் அதிக ரன்களை அடித்த பட்டத்தை வாங்கும் அளவுக்கு முன்னேறியது மிகவும் ஆச்சரியம் தான். அதுமட்டுமின்றி, பல போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த ரன்கள் தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளது.
ஒருவேளை சுரேஷ் ரெய்னா சில போட்டிகளில் அரைசதம் அடித்து, ருதுராஜ் கெய்க்வாட் சொதப்பல் ஆட்டத்தை விளையாடி இருந்தால் அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படாததால், புதிய அணியான லக்னோ அவரை கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றது சரியா ?? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!