இந்திய கிரிக்கெட் அணி : பல முக்கியமான தொடர் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வென்று தவரிசை பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது இந்திய.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னேற்றம் : கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி பல முன்னேற்றங்களை பார்த்து வருகிறது. மகேந்திர சிங் தோனி 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனான பிறகு அனைத்து விதமான ஐசிசி தொடர்களை வென்று கொடுத்துள்ளார் தோனி.
2007ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் கோப்பை, 2010 மற்றும் 2016ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போன்ற கோப்பைகளில் இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார் மகேந்திர சிங் தோனி.
தோனி மற்றும் கம்பிர் இடையே மோதல் :


கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வென்றது. அதில் இறுதியாக தோனி அடித்த சிக்ஸர் தான் காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு எதிராக பேசும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர், தோனி மட்டும் வெற்றிக்கு காரணம் கிடையாது என்றும் போட்டிகளில் விளையாடிய அனைவரும் தான் காரணம் என்று கூறி வந்துள்ளார்.


சமீபத்தில் கம்பிர் இதனை பற்றி பேசியதில் : ” கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் மற்றும் நான் (கம்பிர்) அடித்த 97 ரன்கள் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சாஹீர் கான் தான் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிவரை இந்திய அணியை கொண்டு வந்துள்ளார்.”
“சாஹீர் கான் தான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் உண்மையான ஹீரோ என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர்.”
தோனியின் கேப்டன்ஷி-ஐ மிஸ் செய்யும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் :


சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மோசமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறியுள்ளது. அதனால் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும், அல்லது இந்திய அணியின் பயிற்சியாளராக இடம்பெற வேண்டுமென்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023 போட்டிகளில் சென்னை அணியில் இருந்து நிரந்திரமான ஓய்வை அறிவித்த பிறகு பிசிசிஐ-ல் தோனிக்கு ஒரு பதவி கொடுத்து முக்கியமான வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி கொடுக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ல் நடைபெற உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.