தோனி இல்லை ; எனக்கு இவரை போல தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை விளையாட ஆசைப்படுகிறேன் ; ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் 55 போட்டிகள் நடைபெற உள்ளதால் விறுவிறுப்பாக போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

இந்த வருடம் கோப்பை சென்னை அணிக்கு தானா ?

ஆமாம், எப்பொழுதும் சென்னை அணியின் பேட்டிங் தான் மோசமான நிலையில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சென்னை அணியின் பலமே பேட்டிங் தான் என்ற அளவிற்கு அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதிலும் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக ரன்களை அடிப்பதால் சென்னை அணிக்கு பலமாக மாறியுள்ளது.

இருப்பினும் பவுலிங் மோசமான நிலையில் இருப்பதால் பின்னடைவை சந்தித்து வருகிறது சென்னை. ஆமாம், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தொடரில் 217 ரன்களை அடித்தது சென்னை. ஆனால், வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் சென்னை அணி வென்றுள்ளது.

இதையும் படியுங்க” : பெங்களூர் ரசிகர்களை கடுப்பேற்றிய கம்பிர் ; இணையத்தை கலக்கும் வீடியோ :

இதில் அதிகப்படியான நோ-பால் , Wide போன்ற விஷயங்களை extra வாக கொடுத்துள்ளது சென்னை. அதனால் பவுலிங் சென்னை அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இரண்டாவது பேட்டிங் செய்தால் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கின்றனர்.

சென்னை அணியின் முக்கியமான தொடக்க வீரர் :

கடந்த 2020ஆம் சென்னை அணியின் தொடக்க வீரராக டூப்ளஸிஸ் -யிடம் கைகோர்த்து கொண்டு விளையாட தொடங்கினார் ருதுராஜ். ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2021 தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார் ருதுராஜ்.

அதேபோல தான் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரிலும் அதிரடியாக விளையாடி வருவது சென்னை அணிக்கு மட்டுமின்றி, வருங்கால இந்திய கிரிக்கெட் அணிக்கும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற அதிகவாய்ப்புகள் இருக்கின்றன.

சமீபத்தில், ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பேட்டியில் முக்கியமான தகவல் பகிர்ந்துள்ளார். அதில் “என்னுடைய இன்ஸ்பிரஷன் சுரேஷ் ரெய்னா தான். அவர் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். அதுவும் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான ரன்களை அடித்திருக்கிறார். அதேபோல நானும் என்னுடைய விளையாட்டை தொடர்ச்சியாக விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ருதுராஜ்.”

ரசிகர்களுக்கு கேள்வி :

சமீபமாக இந்திய கிரிக்கெட் அணியில் இஷான் கிஷானுக்கு மட்டும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட் -க்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா ?? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here