ஹர்டிக் பாண்டியாவும் நானும் இதை செய்ய முடியும் என்று நம்பினோம் ; பாகிஸ்தானை வெல்ல இதுதான் காரணம் ; விராட்கோலி ஓபன் டாக் ;

0

16வது போட்டியின் விவரம் : இன்று மதியம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதுவும் ( கேப்டன் )பாபர் அசாம் மற்றும் ஐசிசி டி-20 போட்டிக்கான பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரிஸ்வான் ஆகிய இருவரும் சரியான பார்ட்னெர்ஷிப் செய்யவில்லை.

அதனால் முதல் 10 ஓவர் வரை சரியாக விளையாட முடியாமல் தவித்தது பாகிஸ்தான். ஆனால் மசூத் மற்றும் அகமத் போன்ற இரு வீரர்களின் அதிரடியான விளையாட்டால் ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 159 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் ரிஸ்வான் 4, பாபர் அசாம் 0, மசூத் 52, அகமத் 51, ஷதாப் கான் 5, ஹைதர் அலி 2, நவாஸ் 9, ஆசிப் அலி 2, ஷாஹீன் அப்ரிடி 16 மற்றும் ஹரிஸ் ரவூப் 6 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி.

ஆனால் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணிக்கு தான் மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் ரசிகர்கள் அதிகமாக நம்பிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பண்டியாவில் பார்ட்னெர்ஷிப் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

அதிலும் குறிப்பாக விராட்கோலி இறுதி ஓவர் வரை நின்று விளையாடிய நிலையில் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் 160 ரன்களை அடித்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 4, ரோஹித் சர்மா 4, விராட்கோலி 82*, சூரியகுமார் யாதவ் 15, அக்சர் பட்டேல் 2, ஹர்டிக் பாண்டிய 40, தினேஷ் கார்த்திக் 1, ரவிச்சந்திரன் அஸ்வின் 1* ரன்களை அடித்துள்ளனர்.

முன்னாள் கேப்டனின் கம்பேக் :

கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் விளையாடி கொண்டு வந்தவர் விராட்கோலி. அதுமட்டுமின்றி, சரியாக பேட்டிங் செய்ய முடியாத காரணத்தால் அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார் விராட்கோலி. அதுமட்டுமின்றி, இதுவரை 71 சதம் அடித்துள்ளார் விராட்கோலி.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி-20 போட்டியில் இருந்து விராட்கோலியின் பேட்டிங்-ல் நம்பிக்கை எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்றதிற்கு முக்கியமான காரணம் விராட்கோலி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

போட்டி முடிந்த பிறகு பேசிய விராட்கோலி கூறுகையில் ; “எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் இறுதிவரை நின்று விளையாடினால் நிச்சியமாக ரன்களை அடிக்க முடியும் என்று ஹர்டிக் பாண்டிய நம்பினார்.குறிப்பாக ஷாஹீன் பெவிலியன் பக்கத்தில் இருந்து பவுலிங் செய்ய தொடங்கிய போது எப்படியாவது அடித்து விளையாட வேண்டுமென்று முடிவு செய்தோம்.”

“அதேபோல பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் முக்கியமான பிரைம் பவுலர், இருந்தாலும் அவரது ஒவரில் நான் சில சிக்ஸர் அடித்தேன். ஒரு சின்ன கணக்கு தான், இறுதியாக நவாஸ் தான் பவுலிங் செய்ய போகிறார் என்பதை முன்னாடியே தெரிந்து கொண்டேன். அதனால் ஹரிஸ் ரவூப் பவுலிங்கில் அடித்து விளையாடினால் நிச்சியமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு பயம் ஏற்படும்.”

“இதுவரை மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை தான் பெரிய போட்டியாக நினைத்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்பொழுது இன்றைய போட்டியை சேர்த்திக்கொள்ள போகிறேன். என்னை ரசிகர்கள் எப்பொழுதும் ஆதரவு கொடுத்து கொண்டே வருகின்றனர், இதுபோன்ற ஆதரவு எனக்கு சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் விராட்கோலி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here