மாஸ் காட்டும் தமிழக வீரர்கள் , கிட்டத்தட்ட அணியில் வந்துவிட்டார் ; கூடிய விரைவில் இந்திய அணியில் விளையாடுவார் , தமிழக வீரரை ஆதரித்த ; இந்திய அணியின் முன்னாள் வீரர் ;

0

வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்தியாய் கிரிக்கெட் அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளார்.

சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகின்ற வீரர்கள் பட்டியலை அறிவித்தது. அதில் புதிதாக ரவி பிஷோனி இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிக்கு 18 பேர் மற்றும் டி20 போட்டிக்கு 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

அதில் ஒரு சிலர் வீரர்கள் இரு போட்டிகளிலும் விளையாட உள்ளனர். மற்ற சில வீரர்கள் ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். அதில் இரு தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ;

எனக்கு உண்மையிலும் பெருமையாக இருக்கிறது. நம்ம பசங்க இருவர் இந்திய அணியில் இடம்பெற்றது சந்தோசமாக உள்ளது. முதலில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பின்னர் இந்திய அணியில் விளையாட ஆசைப்படுவார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாடு அணியிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் இடம்பெற்றது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. ஷாருகான் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார், இன்னும் குறுகிய இடைவெளி தான் உள்ளது. ஆனால் அதனை விரைவாக கைப்பற்றிவிடுவார். அதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமில்லை, அவருக்கு வாய்ப்பு மட்டும் கிடைத்தால் நிச்சியமாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர்களான சாய் கிஷோர் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒருவேளை இந்திய வீரர்கள் அடிபட்டு இருந்தால் அவர்களுக்கு பதிலாக அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் அது மிகவும் கடினம் தான்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மோசமான நிலையில் தோல்வியை பெற்றது. ஆமாம்..! டெஸ்ட் போட்டியில் 1 – 2 மற்றும் ஒருநாள் போட்டியில் 0 – 3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதனால் இந்தியாவில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கிய எதிரான தொடரில் ஆவது இந்திய அணி வெல்லுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here