HomeTrending Newsமுதல் போட்டியை போலவே இதை செய்ய நினைத்தோம், ஆனால் அமையவில்லை ; ஷிகர் தவான் வருத்தம்;

முதல் போட்டியை போலவே இதை செய்ய நினைத்தோம், ஆனால் அமையவில்லை ; ஷிகர் தவான் வருத்தம்;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இரு தினங்களுக்கு முன்பு தான் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய.

அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. அதனை தொடர்ந்து இன்று அதே போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

ஏனென்றால் கடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற போது பவுலிங் செய்ய முடிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த முறை எப்படியாவது வெற்றியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற சூழல் எழுந்துள்ளது. அதனால் இந்த முடிவை கையில் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி , முதல் பேட்டிங் செய்து பட்டைய கிளப்பி வருகின்றனர்.

ஆமாம், 17.3 ஓவர் முடிவில் 105 ரன்களை அடித்து 1 விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதிலும் ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த தொடரில் ரோஹித் சர்மா அணியில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்திய அணியை ஷிகர் தவான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

போட்டி ஆரம்பிக்கும் முன்பு இந்திய அணியை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் ; “நாங்கள் முதல் போட்டியில் விளையாடிய பிறகு முதல் பேட்டிங் செய்ய தான் முடிவு செய்தோம். ஆனால் டாஸ்-ல் வெற்றி பெறவில்லை. கடந்த போட்டியில் நாங்கள் பீல்டிங் செய்த போது சில ரன்களை கொடுத்துவிட்டோம்.”

“அந்த தவறுகளை இனிவரும் போட்டிகளில் செய்ய மாட்டோம். இன்றைய இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாட போகிறோம், முதல் போட்டியில் சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர் என்றும், இனிவரும் போட்டிகளில் ஒரு அணியாக சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து ஐந்து டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளனர். ஒருநாள் போட்டியை விட டி-20 போட்டி தான் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால், இன்னும் சில நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img