HomeTrending Newsஇந்திய அணியில் அவரது பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது ; தோல்விக்கு இதுதான் காரணம் ;...

இந்திய அணியில் அவரது பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது ; தோல்விக்கு இதுதான் காரணம் ; ஹாங் காங் கேப்டன் பேட்டி ;

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிசாகட் கான் தலைமையிலான ஹாங் காங் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹாங் ஆங் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆட்டத்தில் சற்று சோர்வான ஒரு போட்டியை பார்க்க முடிந்தது.

அதற்கு முக்கியமான காரணமாக கே.எல். ராகுல் பொறுமையாக விளையாடியது தான். இருப்பினும் ரன்களை தொடர்ந்து அடித்தனர் இந்திய வீரர்கள். பின்பு விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 192 ரன்களை அடித்தது இந்திய.

அதில் கே.எல்.ராகுல் 36, ரோஹித் சர்மா 21, விராட்கோலி 59, சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை அடித்துள்ளனர்.பின்பு 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங் அணி.ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முடிந்தவரையோ அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர். ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய ஹாங் காங் அணியால் 152 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41, கின்சீட் ஷா 30, ஸிஸ்ஷன் அலி 26 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை சூப்பர் 4 லீக் சுற்றுக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. இதுவரை குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய அணியும், குரூப் ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய ஹாங் காங் கேப்டன் நிசாகட் கான் கூறுகையில் ; ” நாங்க பேட்டிங் செய்ய தொடங்கியது எல்லாம் சரியாக தான் இருந்தது. அதிலும் குறிப்பாக நாங்க 13வது ஓவர் வரை சிறப்பாக விளையாடினோம். நங்கள் சிறப்பாக தான் பீல்டிங் செய்தோம்.”

“ஆனால் சிறிது நேரத்தில் பீல்டிங் செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. அதற்கு ஏற்ப இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் பேட்டிங் அதிரடியாக இருந்தது. அதனை பார்க்கவும் நன்றாக இருந்தது. இந்த ஆசிய கோப்பை நிச்சியமாக பல வீரர்களுக்கு அவரவர் திறமையை வெளிப்படுத்த கூடிய முக்கியமான போட்டி தான்.”

“நாங்க இதற்கு முன்பு பெரிய போட்டிகளில் விளையாடியதும் இல்லை. அப்படி இருக்கும் நேரத்தில் இப்படி விளையாடியது சிறப்பாக உள்ளது. புகழ் எல்லாம் வீரர்களுக்கு தான் சேரும். நாளை ஒருநாள் நாங்கள் பவுலிங்கில் எங்கு தவறு நடந்தது என்று பார்க்க போகிறோம். குறிப்பாக டெத் பவுலிங்கில் அதிகமான கவனம் செலுத்த போகிறோம் என்று கூறியுள்ளார் நிசாகட் கான்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img