HomeTrending Newsபா..! என்ன டீம் இது ; ஆசிய கோப்பையில் நிச்சியமாக இந்திய அணிக்கு சரிசமமாக விளையாடும்...

பா..! என்ன டீம் இது ; ஆசிய கோப்பையில் நிச்சியமாக இந்திய அணிக்கு சரிசமமாக விளையாடும் போல ;

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த நான்கு டி-20 போட்டியில் 2 – 2 என்ற சம நிலையில் உள்ளனர். நாளை இரவு நடைபெற உள்ள போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் தொடரை கைப்பற்ற போகின்றனர்.

நான்காவது போட்டியின் விவரம் :

நேற்று மதியம் 3:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதுமட்டுமின்றி மழை காரணமாக 20 ஓவரில் இருந்து 11 ஓவருக்கு போட்டி மாற்றப்பட்டது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும், நஜிபுல்லாஹ்வின் அதிரடியான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரன்கள் குவிந்தனர்.

அதனால் 11 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 132 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக சாசய் 6, குர்பஸ் 24, நஜிபுல்லா 50, ரஷீத் கான் 31 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.

ஆமாம், அயர்லாந்து அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையவிடாமல் தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றி கொண்டே வந்தனர். இருப்பினும் அயர்லாந்து வீரரான டாக்ர்ல் ஆட்டம் இழக்காமல் 41 ரன்களை அடித்தார். ஆனால் 11 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 105 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 20, பால்பிரின் 15, ஹார்ரி டெக்டர் 13, டாக்ர்ல் 41 ரன்களை அடித்த நிலையில் பின்னர் விளையாடி அனைத்து வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர். அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

முன்பு போல் இல்லாமல், போட்டிகளில் அதிகமாக விளையாடி கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பேட்டிங் மட்டுமின்றி இப்பொழுதெல்லாம் பவுலிங்கிலும் சிறப்பாக உள்ளது. நேற்று நடந்த போட்டியில் பாரீட் அகமத் மலிக் 2 ஓவர் மட்டுமே பவுலிங் செய்து 17 ரன்களை கொடுத்த நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுவும் அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img