ஆசிய கோப்பை 2022: நேற்று இரவு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஷாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதின.


போட்டியின் விவரம் :
இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது, ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த பங்களாதேஷ் அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.
பின்பு ஹூசைன் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் தான் பங்களாதேஷ் அணிக்கு ரன்கள் சேர்ந்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 127 ரன்களை அடித்துள்ளது பங்களாதேஷ் அணி. அதில் நைம் 6, அனமுல் 5, ஷாகிப் 11, ரஹீம் 1, ஹூசைன் 48 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 128 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. தொடக்க ஆட்டம் சொதப்பலாக இருத்தலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இப்ராஹிம் சட்ரன் மற்றும் நஜிபுல்லாஹ் சட்ரன் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 131 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.


சூப்பர் 4 லீக் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வாகியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியமான வீரர் நஜிபுல்லாஹ் சட்ரன் தான் என்பதில் சந்தேகமில்லை. 17 பந்தில் 43 ரன்களை விளாசியுள்ளார். அதில் 6 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அதில் அடங்கும்.
பங்களாதேஷ் அணியை போலவே முதல் 10 ஓவர்கள் நிதானமாக விளையாடி கொண்டு இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் நஜிபுல்லாஹ் பேட்டிங் செய்ய தொடங்கிய பின்னர் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவதற்கு முன்பே ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிசாகட் கான் தலைமையிலான ஹாங் காங் அணியும் மோத உள்ளனர். இதுவரை நடந்த போட்டியில் இந்திய அணி வென்று குரூப் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளனர்..!