டி-20 உலகக்கோப்பை போட்டிக்காக இலங்கை அணியில் நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் பவுலர், அதிர்ச்சியில் உலக கிரிக்கெட் வீரர்கள் ; யார் தெரியுமா?

டி-20 உலகக்கோப்பை போட்டிக்காக இலங்கை அணியில் நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் பவுலர், அதிர்ச்சியில் உலக கிரிக்கெட் வீரர்கள் ; யார் தெரியுமா?

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதனால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே இந்தியாவில் கொரோனா தோற்று அதிகம் உள்ளதாக இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று பல எதிர்ப்புகள் வெளியானது.

ஆனால் இறுதியாக பிசிசிஐ சமீபத்தில் அளித்த பேட்டியில், ஐபிஎல் 2021 போட்டிகளை போன்று இல்லாமல், நிச்சியமாக பலமான பாதுகாப்புடன் இந்தியாவில் டி-20 உலக கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை அணியின் பவுலரான லசித் மலிங்க டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட போவதாக தகவல் வெளியானது.

37வயதான லசித் மலிங்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் டி-20 போட்டியில் இருந்து விலகவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய மலிங்க இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி அவரை வெளியேவிட்டது.

முன்னாள் இலங்கை அணியின் வீரரான விக்கிரமசிங்க்கே அளித்த பேட்டியில் ; லசித் மலிங்க உலக கிரிக்கெட் வீரர்களில் இவர் மிகவும் சிறந்த பவுலர். கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனை செய்துள்ளார். அதனால் அவரை வருகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற உள்ளதாக கூறியுள்ளார்.

இதனை குறித்து பேசிய பவுலர் லசித் மலிங்க ; நான் வாய்ப்பை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கின்றேன். நான் டி-20 போட்டிகளை தவற ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளேன். எனக்கு நன்கு தெரியும், எப்படி என்னை போன்ற சீனியர் வீரருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் லசித் மலிங்க.

ஐபிஎல் போட்டியில் ; 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதேபோல ஒருநாள் போட்டியில் 226 போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டையும், டெஸ்ட் போட்டியில் 30 போட்டிகளில் விளையாடிய மலிங்க 101 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.