இவர் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவார் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து ஐந்து டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

கம்பேக் கொடுத்த ஹர்டிக் பாண்டிய ;

கடந்த ஆண்டு ஹர்டிக் பாண்டிய மிகவும் மோசமாக விளையாடி வந்தார். அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகளுக்கு முன்பு ஹார்டி பாண்டியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்து அவரால் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் தவித்து வந்தார். சில போட்டிகளில் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்துள்ளார் ஹர்டிக் பாண்டிய. ஆனால் அதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. அதனால் இந்திய அணியில் அவர் விளையாடினால் நிச்சியமாக சர்ச்சையாக தான் இருக்கும்.

உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு நான் பவுலிங் செய்ய தொடங்கிய பிறகு தான் இந்திய அணியில் விளையாடுவேன், அதுவரை என்னை எந்த அணியிலும் எந்த போட்டியிலும் கைப்பற்ற வேண்டாம் என்று ஹர்டிக் பாண்டிய கூறினார். அதன்படி ஐபிஎல் 2022 போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கம்பேக் கொடுத்தார் ஹர்டிக் பாண்டிய.

அதில் இருந்து இதுவரை அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்டிக் பாண்டிய. இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” ஹர்டிக் பாண்டிய டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாட ஆசைப்படுகிறார். அதனால் மற்ற போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) போட்டிகளில் ஆர்வம் காட்டுவதில்லை.”

“ஆனால் இப்பொழுது அவர் ஒருநாள் போட்டிகளில் நிச்சியமாக விளையாடுவார், ஏனென்றால் அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் அதன்பின்னர் நிச்சியமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேறிவிடுவார். இதே போல தான் மற்ற வீரர்களிடையும் நடைபெற்று வருகிறது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டராக திகழ்கிறார் ஹர்டிக் பாண்டிய. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here