இங்கிலாந்து மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 1ஆம் தேதி அன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய.

முதல் இன்னிங்ஸ் தொடக்கத்தில் தொடர்ந்து ஐந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் வெறும் 100 ரன்களை மட்டுமே அடித்தனர். ஆனால் அந்த நேரத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.
ஆமாம், அதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 84.5 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 416 ரன்களை அடித்தனர். ஆமாம், அதில் சுமன் கில் 17, புஜாரா 13, ஹனுமா விஹாரி 20, பண்ட் 146, ஜடேஜா 104, பும்ரா 30 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது. ஆமாம், இதுவரை 27 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 84 ரன்களை அடித்துள்ளனர். இதற்கிடையில், பல நேரங்களில் மழை வந்த காரணத்தால் போட்டி சரியாக நடைபெறாமல் போனது…!
அதில் அல்லேக்ஸ் லீஸ் 6, சாக் கிராவ்லே 9, ஓலி பாப் 10, ஜோ ரூட் 31, ஜாக் லீச் 0 ரன்களை அடித்து ஆட்டம் இழந்துள்ளனர். இதற்கிடையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பரிஸ்டோவ் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகின்றனர்..! இதற்கிடையில் ராகுல் டிராவிட் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.

நான் (ராகுல் டிராவிட்) பும்ரா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இதை தான் அவரிடம் (பும்ரா) கூறினேன் என்று கூறியுள்ளார். அதில் ” இதில் பதட்டப்பட வேண்டிய நிலை ஒன்றும் ஏற்படவில்லை. நீ ஒரு கேப்டனாக விளையாடுவதை விட பவுலராக விளையாடுவது தான் மிகவும் முக்கியமான ஒன்று.” என்று கூறினேன் (ராகுல் டிராவிட்).
அதுமட்டுமின்றி நான் பல முறை பும்ராவிடம் பேசினேன். அதில் அவரை பதட்டப்பட வேண்டாம் என்று தான் கூறினேன். எனக்கு தெரியும் ஒரு தனி நபராக, அவரால் (பும்ரா) விளையாட்டை புரிந்து கொள்ள முடியும். அவர் சொன்னால் நிச்சியமாக அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அதனை பின்பற்றுவார்கள், அதுதான் தலைவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்..!
0 Comments