2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021, ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஹாம் மைதானம் எந்த அணிக்கும் இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் ஐபிஎல் 2021 வெறும் 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெறும். இதுவரை 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பல மோசமான தோல்விகளை எதிர்கொண்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை, இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றி புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது.
கடந்து ஆண்டு விட இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சிஎஸ்கே அணியை பற்றி பேசிய முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கல் வாகன் ; ஜடேஜா பற்றிய கருத்தை பகிர்ந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 கேட்ச் , 2 விக்கெட் மற்றும் சில ரன்களை எடுத்துள்ளனர்.
அதனால் ஜடேஜா ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல தோனிக்கு பிறகு நிச்சியமாக ஜடேஜாவை சுற்றி தான் சிஎஸ்கே உருவாக வேண்டும். நிச்சியமாக ஜடேஜாவால் சிஎஸ்கே அணியை வழிநடத்த அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன்.
இதுவரை மூன்று போட்டிகளில் 10 ஓவர் பந்து வீசி 2 விக்கெட்டை கைப்பற்றி 63 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதாவது ஒரு ஓவருக்கு 6.30 ரன்கள் என்ற விகிதத்தில் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பீல்டிங் செய்வதில் ஜடேஜாவுக்கு மிஞ்சியது யாருமே இல்லை என்ற அளவுக்கு சுறுசுறுப்பாக பீல்டிங் செய்து வருகிறார்.