நேற்று நடந்த ஐபிஎல் 2021, 12வது போட்டியில் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தார். பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஓவரில் இருந்து இறுதி ஓவர் வரை அதிரடியாக விளையாடியுள்ளனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்கள், டுப்ளஸிஸ் 33 ரன்கள், மொயின் அலி 26 ரன்கள், சுரேஷ் ரெய்னா 18 ரன்கள், அம்பதி ராயுடு 27 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 8 ரன்கள், தோனி 18 ரன்கள், சாம் கரண் 13 ரன்கள், பிராவோ 20 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் ஒரு அளவுக்கு அமைந்தாலும், அதன்பின்னர் எந்த வீரர்களும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் 143 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எடுக்க முடிந்தது.
அதில் அதிபட்சமாக ஜோஸ் பட்லர் 49 ரன்கள் அடித்துள்ளார். மீதமுள்ள வீரர்கள்; சஞ்சு சாம்சன் 1 ரன்கள், சிவம் துபே 17 ரன்கள், டேவிட் மில்லர் 2 ரன்கள், ரியான் பராக் 3 ரன்கள், ராகுல் 20 ரன்கள், ஜெயதேவ் 24 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். சிஎஸ்கே அணியின் ஆல் – ரவுண்டர் ஜடேஜா மிகப்பெரிய வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 28 ரன்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 2 விக்கெட்டையும் ஒரே ஒவரில் கைப்பற்றியுள்ளார்.
19வது ஓவரில் பந்து வீசிய தாகூர். தாகூரின் பந்தை எதிர் கொண்ட ஜெயதேவ் அதனை வேகமாக சிக்சர் லைனுக்கு அடித்தார். அப்பொழுது பவுண்டரி லைனில் இருந்த ஜடேஜா அதனை பிடித்து ஜெயதேவ் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
அப்பொழுது ஜடேஜா அவரது கையில் நான்கு விரலை காட்டி சிறிது கொண்டு இருந்தார். அதற்கு காரணம் அவர் இந்த போட்டியில் 4 கேட்ச் பிடித்துள்ளார். அதன் சந்தோஷத்தில் இப்படி செய்துள்ளார் ஜடேஜா… அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.
வீடியோ :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்த முக்கியமான வீரர்களுள் ஒருவர் ஜடேஜா, இவரது சிறப்பான பந்து வீசும் மற்றும் பீல்டிங் செய்வதில் சிறப்பான வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.