ஹர்டிக் பாண்டிய இந்திய அணியில் இருப்பதால் ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது ; உண்மையை உடைத்த கபில் தேவ் பேட்டி ;

1

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு நடந்து வரும் பொருளாதார பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை வெற்றிகரமாக நான்கு லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் குரூப் ‘ஏ’ பிரிவில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியும் , குரூப் ‘பி’ பிரிவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆமாம், அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிமான காரணம் ஹர்டிக் பாண்டிய தான் என்பதில் சந்தேகமில்லை.

சிறப்பான பவுலிங் மற்றும் பேட்டிங் செய்த ஹர்டிக் பாண்டியாவுக்கு ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக இருக்கும் ஹர்டிக் பாண்டிய இல்லையென்றால் என்ன நடக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.

அதில் “ஹர்டிக் பாண்டிய இந்திய அணியில் இருக்கும்வரை அவரை விளையாட வைத்து பயன்பெறும். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் உள்ளனர்.இவர்களால் பேட்டிங் மட்டுமின்று பவுலிங் செய்ய முடியும். ஒரு கேக்-ல் செர்ரி போன்றது தான் ஆல் – ரவுண்டர் என்பது.”

“நிச்சியமாக ஹர்டிக் பாண்டிய இந்திய கிரிக்கெட் அணியை பெருமைப்பட வைத்துள்ளார். ஆனால் அவருக்கு (ஹர்டிக் பாண்டிய) அடுத்தபடி யோசிக்க வேண்டும். ஏனென்றால் அவ்வப்போது ஹர்டிக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு காயம் என்றால் அது இந்திய அணிக்கும் காயம் போன்றதது தான்.”

“அவரது திறமையை நான் சந்தேகப்படவில்லை. ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டால் இந்திய அணிக்கு பல பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார் கபில் தேவ்.” நிச்சியமாக ஹர்டிக் பாண்டியவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியில் யாரும் இல்லை எனது தான் உண்மை…!

ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணியிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஹர்டிக் பாண்டிய இல்லையென்றால் அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here