சொன்னது ஒன்று செய்வது ஒன்று..! விருத்திமான் சஹாவின் தர்ம யுத்தம் வெல்லுமா ? கங்குலி ஏன் இப்படி செய்கிறார் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. அதேபோல அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவதே இல்லை.

வருகின்ற 24 ஆம் தேதி இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. விராட்கோலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் ரோஹித் சர்மா. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணியை அறிவித்துள்ளது.

டி20 போட்டிக்கான இந்திய அணியின் விவரம் ;

ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, புவனேஸ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சஹால், உமேஷ் யாதவ்.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விவரம் இதோ ;

ரோஹித் சர்மா, பிரியங்க் பஞ்சல், மயங்க் அகர்வால், விராட்கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுமன் கில், ரிஷாப் பண்ட், பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் , ஜெயந்த் தாகூர், பும்ரா, ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சவுரப் குமார்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான விருத்தமன் சஹா கங்குலி செய்த சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். அதில் ” நான் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து நான் 61 ரன்களை அடித்தேன் “.

அதனை பாராட்டும் வகையில் எனக்கு பிசிசிஐ தலைவரான கங்குலி, எனக்கு வாட்சப் -ல் நீ நிச்சியமாக அதிக நாட்கள் இன்னும் அணியில் இருப்பாய் என்று என்னிடம் கூறினார். அது எனக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்தது என்று கூறியுள்ளார் விருத்தமன் சஹா . ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆமாம்…! இறுதியாக நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் , இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காமல் வருகிறார் சஹா…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here