நீண்ட இடைவெளிக்கு பிறகு சதம் அடித்து சாதனை படைத்த விராட்கோலி ; இது வெறும் ட்ரைலர் தான் ;

0

இந்திய கிரிக்கெட் அணி : இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் இரு தினங்களுக்கு முன்பு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற தொடங்கியது.

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் விளையாடிய நிலையில் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி விட்டுக்கொடுக்காமல் விளையாடி வருகிறது இந்திய. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 1 போட்டியிலும் வென்றுள்ளனர். அதனால் நான்காவது போட்டி ட்ராவில் முடிந்த தொடரை இந்திய அணி வென்று விடும். அப்படி இல்லாவிட்டால் தொடரே ட்ராவில் முடிந்துவிடும்.

இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி ட்ரா செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். 4 விக்கெட்டை இழந்தாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டனாக விராட்கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.

விராட்கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரது பேட்டிங் பெரிய அளவில் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இல்லை. அவ்வப்போது அரைசதம் அடித்து வந்துள்ளார் விராட்கோலி. பின்பு அவரது பங்களிப்பும், இந்திய அணியின் பங்களிப்பும் மோசமாக இருந்த காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இறுதியாக 2019ஆம் ஆண்டு சதம் அடித்த விராட்கோலியால் கடந்த இரு ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு விளையாடி வந்தனர் கோலி. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார்.

அதில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக மாறியுள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் விராட்கோலி, இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் 139 ரன்களை அடித்தார்.

அதன்பிறகு சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வந்த விராட்கோலி இப்பொழுது விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி கம்பேக் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, விராட்கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 28 சதம், ஒருநாள் போட்டியில் 46 சதம் மற்றும் டி-20 போட்டியில் ஒரு சதம் அடித்துள்ளார். விராட்கோலி இதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி மொத்தம் 75 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 சதம் அடித்து சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here