சென்னை அணிக்கு அமைந்த முக்கியமான விஷயம் ; சிறப்பாக அமைந்த அணி ; இவர் தான் முக்கிய காரணம் ;

0

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங்கைத் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்க வீரர்களான ருத்துராஜ் மற்றும் டேவன் கான்வே ஆகியோரை களமிறக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்களை அடித்துள்ளனர்.

அதில், ரூட்டுராஜ் கெய்க்வாட் 57, டேவன் கான்வே 47, சிவம் துபே 27, மொயின் அலி 19, பென் ஸ்டோக்ஸ் 8, அம்பதி ராயுடு 27*, தோனி 12 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கி விளையாட உள்ளனர்.

சென்னை அணியின் நம்பிக்கை :

சென்னை அணிக்கு மட்டுமின்றி, அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டுமென்று தான் பேட்டிங் செய்யும் அணிகள் நினைப்பது உண்டு. அப்பொழுது எந்த விதமான பயமும் இல்லாமல் ரன்களை விளாச முடியும்.

இருப்பினும், சென்னை அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டி சிறப்பாக அமைந்துள்ளது தான் உண்மை. அதிலும் இளம் வீரரான ரூட்டுராஜ் பங்களிப்பு சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. முதல் போட்டியில் 92 ரன்களை விளாசினார்.

இன்றைய போட்டியில் (லக்னோ அணிக்கு எதிராக) சிறப்பாக விளையாடி 57 ரன்களை விளாசினார் ரூட்டுராஜ். அதுமட்டுமின்றி, பார்ட்னெர்ஷிப் கொடுத்த டேவன் கான்வேவும் சிறப்பாக விளையாடி 47 ரன்களை அடித்திருக்கிறார். அதனால் சென்னை அணியால் 200-க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடிந்துள்ளது.

இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்தால் நிச்சியமாக இந்த ஆண்டு கோப்பையை சுலபமாக கைப்பற்றிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here