ரெய்னாவுக்கு அடுத்த படி இவர் தான் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான வீரர்…!!! ரசிகர்கள் மிகழ்ச்சி.. ! யார் அந்த வீரர் தெரியுமா ??
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி சிறப்பான முறையில் ஐபிஎல் 2021 ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டியில் விளையாடி உள்ளது. அதில் டெல்லி எதிரான போட்டியில் தோல்வியையும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியையும் கைப்பற்றியுள்ளது. இப்பொழுது 2 புள்ளிகளை பெற்றுள்ளது.
முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு நல்ல பேட்டிங் இருந்தாலும் பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முதலில் சில முக்கியமான விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் சிஎஸ்கே அணி திணறினர். அதன் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டதில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான பந்து வீச்சு அமைந்தது. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சிஎஸ்கே அணி. ஐபிஎல் 2021, ஏலத்தில் புதிதாக சிஎஸ்கே அணியில் மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ஹாரி ஷங்கர் ரெட்டி, ராபின் உத்தப்பா இடம்பெற்றுள்ளனர்.
புதிய வீரர்களில் இதுவரை இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி மட்டுமே இரு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதிலும் முதல் போட்டியில் 36 ரன்களையும் , இரண்டாவது போட்டியில் 46 ரன்களையும் எடுத்துள்ளார். அதனால் சிஎஸ்கே அணிக்கு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
மொயின் அலி பேட்ஸ்மேன் மற்றுமின்றி நல்ல ஒரு சூழல் பந்து வீச்சாளரும் கூட என்பதில் சந்தேகம் இல்லம். இதுவரை இரண்டு போட்டிகளில் சேர்த்தி 6 ஓவர் பந்து வீசியுள்ளார். அதில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் மொயின் அலி. சிஎஸ்கே அணிக்கு கிடைத்த முக்கியமான வீரர்களுள் ஐவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
இனிமேல் கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் எப்படி சுரேஷ் ரெய்னாவுக்கு நிரந்தரமான இடம் இருக்கிறதோ .. அதே போல மொயின் அலிக்கும் இடம் நிச்சியமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.