இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்த இந்தியக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் போனது. ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணியை கலங்க வைத்தனர். ஆமாம், சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடிய ரிஷாப் பந்த் சதம் மற்றும் ரவீந்திர 80க்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர்.
முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 338 ரன்களை அடித்துள்ளனர். அதில் சுமன் கில் 17, புஜாரா 13, ஹனுமா விஹாரி 20, விராட்கோலி 11, ரிஷாப் பண்ட் 146, ஸ்ரேயாஸ் ஐயர் 15, ரவீந்திர ஜடேஜா 83 ரன்களை அடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நேற்று இரவு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே டி-20 பயிற்சி ஆட்டம் நடந்தது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 38, தீபக் ஹூடா 59 ரன்களை அடித்தனர்…!
இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான க்ரேமே ஸ்வான் கூறுகையில் ; “வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும். எனக்கு தெரிந்து நிச்சியமாக உலகக்கோப்பை டி-20 2022க்கு பிறகு இரு பெரிய வீரர்களான (விராட் மற்றும் ரோஹித்) ஆகிய இருவருக்கும் மாற்றாக இவர்கள் இருப்பார்கள்.”

“இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 பயிற்சி ஆட்டத்தில் அவர்கள் விளையாடிய ஆட்டம் நிச்சியமாக அவர்களுக்கு இந்திய அணியில் இடத்தை ஏற்படுத்தி கொடுக்கும். என்னதான் நேற்று விளையாடியது சிறிய மைதானமாக இருந்தாலும், அவர்கள் விளையாடிய ஷாட்ஸ் மிகவும் அருமையான ஒன்று தான்.”
நிச்சியமாக இவர்களது விளையாட்டு இன்னும் உச்சத்தை எட்டும் என்பதில் மாற்றமில்லை என்று கூறியுள்ளார் ஸ்வான். ஜூலை 7ஆம் தேதி அன்று முதல் டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் விவரத்தை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது.
0 Comments