உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு விடைபெற போகும் இந்திய அணியின் பினிஷர் ; அதிர்ச்சியில் இருக்கும் இந்திய ரசிகர்கள் ;

0

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த முடிந்த பேட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி குரூப் 2ல் முதல் இடத்தை பிடித்த காரணத்தால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளனர்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை வெல்லுமா இந்திய ?

இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. ஏனென்றால், ஒருசில போட்டிகளில் பந்து வீச்சு மோசமான நிலையில் இருக்கின்றனர். அப்படி இல்லையென்றால் ஒரு சில போட்டிகளில் பேட்டிங் மோசமாக இருக்கிறது.

அதனால் 50 / 50 தான். இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் சற்று வலுவாக தான் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்பட்சத்தில் இந்திய அணி போட்டிகளில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நிலையில் விடைபெற போகும் இந்திய அணியின் பினிஷர் ..!

உலகக்கோப்பை போட்டிக்கு பின் ஓய்வு அறிவிப்பா ?

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வீரர்களில் ஒருவர் தான் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷராக சிறப்பாக விளையாடி வந்தார்.

அதனால் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக். இந்திய அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் மற்ற அணிகளுக்கு இடையேயான சீரியஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அவரது (தினேஷ் கார்த்திக்) பங்களிப்பு இந்திய அணிக்கு தேவை என்ற நினைத்த காரணத்தால் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடி வருகிறார்.

ஆனால், இந்த உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்-ன் பங்களிப்பு பெரிய அளவில் இந்திய அணிக்கு உபயோகமாக இருந்ததா என்று கேட்டால் ? இல்லை என்பது தான் உண்மை..! இந்த உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி தினேஷ் கார்த்திக் 1, 6, 7 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

37 வயதான தினேஷ் கார்த்திக்கு நிச்சியமாக இனிவரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடவாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். அதற்கு ஆரம்பமாக நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தினேஷ் கார்த்திக் பெயர் இடம்பெறவில்லை.

இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அனைத்து விதமான முயற்சிகளையும் ராகுல் டிராவிட் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வயதான வீரர்களை விட இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here