Advertisement
HomeTrending Newsமீண்டும் இவரா ? பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ எடுத்த முடிவால் ரசிகர்கள்...

மீண்டும் இவரா ? பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிருப்தி ;

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்ற காரணத்தால் தொடரை வென்றுள்ளது பங்களாதேஷ்.

சர்வதேச தரவரிசை பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கடந்த பல ஆண்டுகளாவே ஐசிசி தொடருக்கான போட்டியில் வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய. இறுதியாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் ஐசிசி தொடரை வென்றுள்ளது இந்திய.

ஆனால் அதன்பின்னர் ரோஹித் சர்மா, விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் இந்திய அணியின் விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. அதனை தொடர்ந்து இப்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் மோசமான நிலையில் விளையாடி தோல்வி பெற்றுள்ளது இந்திய.

மோசமான நிலையில் விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் :

ஐபிஎல் 2022 போட்டிக்கான தொடரில் தினேஷ் கார்த்திக்-ன் பங்களிப்பு பெரிய அளவில் இருந்த காரணத்தால் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக ப்ளேயிங் 11ல் இடம்பெற்றார். அதனை அடுத்து இப்பொழுது ரிஷாப் பண்ட் -க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதனை சரியாக பயன்படுத்தாமல் மோசமான நிலையில் விளையாடி வருகிறார் ரிஷாப் பண்ட்.

அதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டுமென்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் ரிஷாப் பண்ட் இடம்பெறவில்லை. மீண்டும் இப்பொழுது டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் இடம்பெற்றது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் ரிஷாப் பண்ட் -க்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரிஷாப் பண்ட் இறுதியாக விளையாடிய 10 போட்டிகளின் விவரம் :

இறுதியாக விளையாடிய 10 டி-20 போட்டியில் : 11, 6, 6, 3, 27, 0, 0, 0, 20, 17 ரன்களை அடித்துள்ளனர். 10 ஒருநாள் போட்டியில் : 10, 0, 15, 125, 0, 0, 56, 18 ரன்களை அடித்திருக்கிறார் ரிஷாப் பண்ட். ஆனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டியை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக தான் விளையாடி இருக்கிறார் ரிஷாப் பண்ட். ஆனால் சிறப்பாக விளையாடுவாரா ? இல்லையா ?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular