ரொம்ப பேச வேண்டும்..! England vs India டெஸ்ட் சீரியஸ் போட்டியில் இவங்க தான் ஜெயிக்க போறாங்க..! அதில் எந்த மாற்றமும் இல்லை ; ராகுல் டிராவிட் (ஒருவேளை சரியாக இருக்கோமோ)
டெஸ்ட் தொடர் போட்டிகள் ;
வருகின்ற ஜூன் 18 தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. பின்னர் அதனை தொடர்ந்து மீண்டும், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் எதிர்கொள்ள போகிறது இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய அணியின் விவரம்;
சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டியில் விளையாட போகும் இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே, மயங்க அகர்வால், புஜாரா, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல்,ல வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது ஷாமி, முகமது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் , சஹா.
வெற்றியை பற்றி பேசிய ராகுல் டிராவிட்;
இந்திய அணியின் டெஸ்ட் நாயகன் என்றாலே ரசிகர்களின் மனதில் வரும் ஒரே நபர் அது ராகுல் டிராவிட் தான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்; ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற போகின்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டியை பற்றி பேசியுள்ளார்.
வெற்றியை குறித்து பேசிய ராகுல் டிராவிட்; விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தொடரை கைப்பற்ற கூடிய அனைத்து வழியும் இருக்கிறது. இது ஒரு நல்ல சமயம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்து அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் பற்றி குறை சொல்லவே முடியாது.
இருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அஸ்வின் நம்மிடம் உள்ளார். அதுமட்டுமின்றி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரை கைபைற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
அதேபோல நம்பிக்கையும் சிறப்பான ஆட்டம் இருந்தால் நிச்சியமாக இந்திய அணி வெல்லும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். அதுமட்டுமின்றி, ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு கேப்டன் ஆக இருந்த போது 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.