HomeTrending Newsவயது ஆகிவிட்டால் இதனை எதிர்பார்க்கவே கூடாது, இது இயல்பு தான் ; பயிற்சியாளர் ராகுல் டிராவிட்...

வயது ஆகிவிட்டால் இதனை எதிர்பார்க்கவே கூடாது, இது இயல்பு தான் ; பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி ;

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் ராவி சாஸ்திரி. அவரை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ளார்.

அதனால் இந்திய கிரிக்கெட் கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலி இருந்து இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாகராக பொறுப்பேற்று வருகிறார்.

இப்பொழுது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது இரு அணிகளும். அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டிக்கு முன் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் ;

வயது ஆக ஆக பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாரவது கூறினால் அதற்கு என்ன சொல்வதென்றே தெரியாது. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருக்கும். இன்று என்னுடை குடும்பம், நண்பர்கள் பலர் எனக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். நான்காவது இன்னிங்ஸ்-ன் தொடக்கத்தில் குறைந்தது 240 – 250 ரன்களை அடித்திருக்க வேண்டும்.

ஆனால் பிட்ச் அதற்கு ஏற்ப இல்லை என்பது தான் உண்மை.ஆனால் தென்னாபிரிக்கா அணியை பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். ஆனால் அதற்கு இந்திய வீரர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய அணிக்காக விளையாடுவது, அதும் சரித்திரத்தை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியம். இந்திய வீரர்கள் மத்தியில் நல்ல ஒரு சூழல் அமைந்துள்ளது. கடந்த போட்டியை விட இந்த டெஸ்ட் போட்டியில் சில தவறுகள் திருத்தப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்தால், அந்த போட்டியில் எதிர் அணிக்கு சவாலாக தான் இருப்போம் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

இன்றைய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் அதிக ரன்களை அடிப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில்,

கே.எல்.ராகுல் 12 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 15 ரன்களில் ஆட்டம் இழந்து எதிர் அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 300+ ரன்களை அடித்தால் வெற்றியை கைப்பற்ற ஏதாவது வாய்ப்பு இருக்கும். ஏனென்றால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் வெறும் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து போட்டியை வென்றுள்ளனர்.

அதனால் இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தொடரை கைப்பற்றுமா ?இந்திய கிரிக்கெட் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img