முதல் போட்டியில் இவர் இல்லையாம் ; தொடக்கத்திலேயே பின்னடைவை சந்திக்கும் சென்னை அணி ?

0

நாளை இரு முதல் ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் எதிர்கொண்டனர். அதில் அதிகபட்சமாக 17 போட்டிகளில் சென்னை அணியும் 8 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த இரு அணிகளும் ப்ளேயிங் 11ல் பல மாற்றங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் புத்தக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மெகா ஏலத்தை நடத்திய காரணத்தால் பல வீரர்கள் வெவ்வேறு அணிகளில் மாற்றம் செய்ப்பட்டுள்ளனர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் நிச்சயமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் முதல் சில போட்டிகளில் வெற்றியை கைப்பற்றினால் தான் இறுதியாக எந்த ஒரு பயமும் இல்லாமல் விளையாட முடியும். ஆனால் சென்னை அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டரான மொயின் அலி முதல் போட்டியில் நிச்சியமாக விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.

மொயின் அலியின் விசா கிடைக்காத காரணத்தால் அவர் இந்திய வருவதற்கு தாமதமாகும் என்றும், பின்னர் குறைந்தது மூன்று நாட்கள் தனிமையில் இருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை அணி கூறியுள்ளது. அப்படி பார்த்தால் நிச்சியமாக அவரால் முதல் போட்டியில் பங்கேற்க முடியாது.

இருப்பினும் மொயின் அலி கடந்த 2021ஆம் ஆண்டு தான் சென்னை அணியில் அறிமுகம் ஆனார். அதில் சென்னை அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மொயின் அலி , இந்த ஆண்டு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இடத்தை கைப்பற்றினார்.

மொயின் அலி-க்கு பதிலாக அதிரடியாக விளையாட கூடிய பேட்ஸ்மேன் மற்றும் ஒரு பவுலராக களமிறக்கினால் தான் சரியாக இருக்கும். ஏனென்றால் மொயின் அலி ஆல் – ரவுண்டர் அதனால் மிச்சேல் சண்ட்னர் அல்லது தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த DWAINE PRETORIUS இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

என்ன செய்ய போகிறது சென்னை அணி ? ரவீந்திர ஜடேஜா என்ன முடிவு செய்ய போகிறார் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here