ஐந்தாவது டெஸ்ட் போட்டி :
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆமாம், இந்திய அணியின் மாஸ் கம்பேக் தான், இங்கிலாந்து அணியின் பின்னடைவுக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது..!

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையாமல் போனது, அது மட்டுமின்றி மழை வந்த காரணத்தால் பேட்டிங் செய்ய மிகவும் கடினமான சூழல் உருவானது.
அதனால் முதல் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 98 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 200 ரன்களை தான அடிக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் – ரவுண்டர் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன.

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 416 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் நிலையில் 27 ஓவர் முடிவில் 84 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட்டை இழந்துள்ளது. தாக்கு பிடிக்குமா ? இங்கிலாந்து அணி ?
இந்த போட்டி ஆரம்பிக்கும் முன்பு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் அவருக்கு (ரோஹித் பதிலாக இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை நியமனம் செய்தது பிசிசிஐ. ஏனென்றால் பும்ரா இந்திய அணியின் முக்கியமான ப்ளேயிங் 11 வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதனால் அவர் நியமனம் செய்தது பிசிசிஐ. அதில் முதல் இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்ய வந்த கேப்டன் பும்ரா, ஏதோ டி-20 போட்டியில் விளையாடுவது போல விளையாடி ரன்களை விளாசினார். ஆமாம், ஒரே ஓவரில் 35 ரன்களை அடித்துள்ளார் பும்ரா. ஒருவேளை பும்ராவுடம் யாராவது ஒரு வீரர் சரியாக விளையாடிருந்தால் நிச்சியமாக இன்னும் இந்திய அணிக்கு ரன்கள் அதிகரித்திருக்கும்.
அதுமட்டுமின்றி, பவுலிங் செய்த பும்ரா, முதல் மூன்று முக்கியமான இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் பும்ரா. ஆமாம், அதில் அல்லெஸ் லீஸ் , சாக் கிராவ்லே மற்றும் ஓலி பாப் போன்ற வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் பும்ரா.
ஒரு அணியாகவும் சரி தனி வீரராகவும் சரி அவரது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார் பும்ரா..! டெஸ்ட் போட்டிக்கான நிரந்திர கேப்டனாக பும்ரா இருந்தால் எப்படி இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!
0 Comments