இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் :


ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இன்று இரவு 7 மணியளவில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் இருக்கும் ரிஷாப் பண்ட் :


தோனிக்கு பிறகு இந்திய அணியின் முக்கியமான விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார் ரிஷாப் பண்ட். கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து கிளம்பி சென்று கொண்டு இருந்த நேரத்தில், அவருடைய கார் விபத்திற்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்தது. அதில் இருந்து ரிஷாப் பண்ட் தீக்காயங்களுடன் அங்கிருந்து வெளியேறினார். அனால் இன்னும் 3 முதல் 6 மாதங்கள் நிச்சியமாக ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருத்தம் தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் ஆறுதல் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.


ராகுல் டிராவிட் : “ரிஷாப் பண்ட் நீ இப்பொழுது நன்றாக இருக்கிறாய், கூடிய விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும். கடந்த ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் உன்னுடைய திறமையை வெளிப்படுத்தி விளையாடி இருக்கிறாய். இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுதெல்லாம் மோசமான நிலையில் இருந்ததோ, அப்பொழுதெல்லாம் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ்கிறார் ரிஷாப்.
ஹர்டிக் பாண்டிய : “எனக்கு தெரியும் நீ (ரிஷாப் பண்ட்) ஒரு அதிரடியாக வீரர் என்று. நீ கூடிய விரைவில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பி வர வேண்டுமென்று நான் ஆசைப்படுறேன். இது போன்ற தடைகள் நிச்சியமாக அனைவருக்கும் ஏற்படும். அதனை நீ தகர்த்திவிட்டு மேலே வருவாய், அது போன்ற வீரர் தான் நீ. கூடிய விரைவில் இந்திய அணிக்கு திரும்பி உன்னுடைய கம்பேக் -ஐ கொடுக்க வேண்டும்.
சூர்யகுமார் யாதவ் : ” இப்பொழுது உனக்கு எவ்வளவு வலியாக இருக்கும் என்று எங்களுக்கு நன்கு தெரியும். இந்திய அணியில் உன்னை மிஸ் செய்கிறோம். முடிந்தவரை நீ விரைவாக அணிக்கு திரும்பி விடு, எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.”