இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னேற்றம்:
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியை பெற்றது இந்திய.
ஆனால் அதன்பின்னர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான தொடர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆமாம், தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாபே போன்ற தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தில் முன்னேறும் உள்ளது.
சமீபத்தில் தான் 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா தலைமையில் கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, தீபக் ஹூடா, விராட்கோலி, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் ஏற்பட்டு இருக்கும் குழப்பம் :
இந்த ஆசியா கோப்பைக்கான இந்திய அணியில் மொத்தம்நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷானி , ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுழல் பந்து வீச்சாளருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கபடும்.
அதனால் அணிய இரு சுழல் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் பல குழப்பம் ஏற்படும். நிச்சியமாக பேட்டிங் லைன் சரியாக இருக்க வேண்டுமென்றத்திற்காக ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்வார்கள். ஆனால் சஹால் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரில் ஏதாவது ஒருவரை தான் ப்ளேயிங் 11ல் விளையாட போகின்றனர். அதில் யார் ?
கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் லெக் ஸ்பின்னர் அணியில் இல்லாத காரணத்தால் தான் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை பெற்றது என்று அனைவரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனால் ரவிச்சந்திரன் அஸ்வினை காட்டிலும் யுஸ்வேந்திர சஹாலுக்கு தான் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற்றால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!