இந்திய அணிக்கு சாதகமாக மாறியது ஆசியா கோப்பை. அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் அணி ; முழு விவரம் இதோ ;

0

இந்திய அணிக்கு சாதகமாக மாறியது ஆசியா கோப்பை. அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் என்ன நடந்தது ; முழு விவரம் இதோ ;

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இரு தொடரிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

தொடர்ந்து மோசமான நிலையில் ஐசிசி தொடரில் விளையாடி வருகிறது இந்திய :

மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் அட்டகாசமாக விளையாடு வரும் இந்திய கிரிக்கெட் அணியால் சமீப காலமாகவே ஐசிசி தொடரில் மட்டும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய. தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி திணறுகிறது உண்மை.

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்துள்ளது ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை 2022ல் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆசிய கோப்பை 2023ல் இந்திய அணிக்கு சாதகமாக மாறிய பிரச்சனை :

இந்த ஆண்டு 2023ல் ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானிலும், ஒருநாள் உலகக்கோப்பை போட்டி இந்தியாவிலும் நடைபெற உள்ளது. கடந்த பல ஆண்டுகளாவே இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாடியதே இல்லை. அதனால் இந்த முறை ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி நிச்சயமாக பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லாது என்று பிசிசிஐ உறுப்பினர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவு எடுத்தனர். அதில் இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்களும் (பாகிஸ்தான் அணி) இந்தியாவில் நடைபெற ஒருநாள் போட்டியில் நாங்க பங்கேற்க மாட்டோம் என்று கூறியிருந்தனர்.

ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி இந்திய அரசாங்கம் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் நாட்டுக்கு விளையாட அனுப்பாது. அதனால் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டு ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் கூட நடத்தட்டும் என்று பிசிசிஐ உறுப்பினர் உறுதியாக கூறியுள்ளார் ஜெய் ஷா.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here