இன்று இரவு 7:00 மணியளவில் போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர்.


இதில் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை விட இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி எப்படி எதிர்கொள்ள போகிறது ? இன்றைய போட்டியில் யார் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர் என்று பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
எப்பொழுது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் அல்லது கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் தான் சமீப காலமாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகின்றனர். ஆனால், இன்றைய போட்டியில் ஷிகர் தவான் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் அணியில் இல்லை..!
அதனால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் பட்டியலில் ரூட்டுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் ஆகிய இருவர் தான் அணியில் உள்ளனர். அதனால் இந்த இருவரில் ஒருவர் தான் ஷிகர்தவானுடன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.


கடந்த ஆண்டு 2021யில் ஒருநாள் , டி-20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி அதிக ரன்களை அடித்துள்ளார் ரூட்டுராஜ். ஆனால் கடந்த ஆண்டு இந்திய அணியில் ரூட்டுராஜ் -க்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் சமீபத்தில் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானுடன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் 5 போட்டிகளில் 4 சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இடது, வலது பேட்டிங் இருந்தால் இன்னும் அது சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.”
ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை டி-20 போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே விளையாடியுள்ளார். இன்று இரவு நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறுவாரா ? இல்லையா ?? தொடக்க வீரராக ருதுராஜ் இடம்பெற்றால் பார்ட்னெர்ஷிப் அமையுமா ?