கொஞ்சம் கூட பயமே இல்லாமல் தான் விளையாடினார் ; இப்படி விளையாடுவார் என்று எங்களுக்கு நன்கு தெரியும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக்

0

போட்டி 2: ஆசிய கோப்பைக்கான இரண்டாவது டி-20 போட்டிகள் நேற்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

டாஸ் மற்றும் முதல் பேட்டிங் விவரம் :

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகம் பாபர் அசாம் வெறும் 10 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த பாகிஸ்தான் அணியால் இறுதிவரை விளையாடி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 147 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் ரிஸ்வான் 43, அஹமத் 28, ஷதாப் கான் 10, ஹாரிஸ் ரவூப் 13 ரன்களை அதிதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இலக்கு மற்றும் இந்திய அணியின் பேட்டிங் :

பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. பாகிஸ்தான் அணியை போலவே தொடக்க ஆட்டம் இந்திய அணிக்கு மோசமாக அமைந்தது. ஏனென்றால் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் பந்தில் ஆட்டம் இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

ஏனென்றால் இந்த போட்டியில் ரிஷாப் பண்ட் போன்ற முன்னணி வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும் விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடிய காரணத்தால் 19.4 ஓவர் முடிவில் 148 ரன்களை அடித்தது இந்திய.

அதில் ரோஹித் சர்மா 12, விராட்கோலி 35, ரவீந்திர ஜடேஜா 35, சூரியகுமார் யாதவ் 18, ஹர்டிக் பாண்டிய 33 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்தியா அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

ரோஹித் சர்மா பேட்டி:

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “போட்டி பாதியில் கூட சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாங்க தான் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படி தான் நடக்கும். அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன வேலை என்பதை தெளிவாக எடுத்து சொன்னால் நிச்சியமாக அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள்.”

“இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது சாதாரணத்தை விட கொஞ்சம் பெரியது தான். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த ஆண்டு இந்த இடத்தில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். அதேபோல அவர்களால் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பவுலிங் செய்ய முடியும்.”

“இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்ததில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியில் இல்லாத நேரத்தில் அவருடைய உடலுக்கு என்ன தேவை என்பதை சரியாக யோசனை செய்து அதற்கு ஏற்ப பயிற்சி செய்து வந்துள்ளார் ஹர்டிக்.”

“அதனால் தான் இப்பொழுது ஸ்ட்ரைக் ரேட் 140+ மேல் வைத்திருக்கிறார். அவருடைய (ஹர்டிக் பாண்டிய) பேட்டிங் திறன் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்பொழுதெல்லாம் அவரது விளையாட்டில் பொறுமை வந்துவிட்டது. அதுமட்டுமின்றி அதிக நம்பிக்கையுடன் என்ன செய்யவேண்டுமோ அதனை செய்து வருகிறார் ஹர்டிக் பாண்டிய.”

“இந்த மாதிரியான போட்டிகளில் ஓவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் தேவைப்பட்டது. அந்த நேரத்தி யாராக இருந்தாலும் பயம் நிச்சியமாக ஏற்பட்டு இருக்கும். ஆனால் ஹர்டிக் பாண்டிய அதனை கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் அவருடைய விளையாட்டை சிறப்பாக விளையாடினார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here