கடைசி போட்டியில் ஆவது இவருக்கு இந்திய அணியில் இடம்கிடைக்குமா ?? எதற்காக இவரை எடுத்திங்க ..ஐயோ…!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் லீக் போட்டிகள் நாளை இறவுடன் நிறைவடைய உள்ளது. அதன்பின்னர் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுவரை இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது. ஆனால் நியூஸிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடனும் , பாகிஸ்தான் அணி 4 போட்டியில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளனர்.

அதனால் குரூப் B ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் தேர்வாகியுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணிக்கு வாய்ப்பு இருந்திருக்க கூடும். ஆனால் அப்படி நடக்க வில்லை… !!!

ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் ராகுல் சஹார், வருண் சக்ரவத்தி, இஷான் கிஷான் போன்ற வீரர்கள் அதில் அடங்கும். ஆனால் ராகுல் சஹார் இடம்பெற்றது தான் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. ஏனென்றால் , இந்திய அணியின் முன்னனி சுழல் பந்து வீச்சாளரான யூஸ்வேந்திர சஹால் அணியில் இடம்பெறவில்லை.

அதற்கு பதிலளித்த இந்திய அணியின் தேர்வாளர்கள் ; ராகுல் சஹார் வ்ரிஸ்ட் ஸ்பின்னர் , ஆனால் சஹால் அப்படி இல்லை. அதனால் தான் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக ராகுல் சஹார் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். அவரும் விளையாடுவார் என்ன செய்ய போகிறார் என்று பார்த்தால் இதுவரை அவருக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.

இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு இன்னும் ஒரு போட்டியில் கூட வழங்கவில்லை. நாளை நபிமியா அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி, இதில் வெற்றி பெற்றாலும் சரி..!! தோற்றாலும் சரி…!! இந்திய அணிக்கு அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு என்பது இல்லாமல் போய்விட்டது….! அதனால் ராகுல் சஹார் போன்ற இந்திய அணியில் தேர்வாகி இன்னு விளையாடமால் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்குமா ??

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க…! யுஸ்வேந்திர சஹாலை விட ராகுல் சஹார் சிறந்த சுழல் பந்து வீச்சாளர ??? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!